ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு பழமாக இருக்கிறது. இந்த ஆப்பிளில், புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் சக்தி இருக்கிறது. அதோடு, மூளை ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் மேம்படுத்துவதற்கு ,இது உதவியாக இருக்கிறது. ஆப்பிளின் நன்மைகள் குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்பிளில் இருக்கக்கூடிய செக்டிங் என்ற கரையக்கூடிய நார்சத்து அதிக அளவில் இருப்பதால், உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆப்பிளில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள், இதய நோய் ஆபத்தை குறைத்து விடும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிளை சாப்பிடுவது, நீரிழிவு நோயின் ஆபத்தையும் வெகுவாக குறைக்கிறது. நுரையீரல் மார்பக மற்றும் செரிமான பாதை, புற்று நோய்களை எதிர்த்தும் போராடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆப்பிள்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக, மூளையில் உண்டாகும் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றது. சிலருக்கு ஆப்பிள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியதாகவும், அதிக குளிர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது.
இந்த ஆப்பிளை சாப்பிட்டால், அதில் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் காரணமாக, கண்புரை நோய்கள் உண்டாவது வெகுவாக குறையும்.