fbpx

BREAKING NEWS: “ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி..”! துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் நிறுத்தப்படுகிறதா.?

மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசியமான பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அரசு பல உதவிகளையும் வழங்கி வருகிறது. நிவாரண நிதி மற்றும் பொங்கல் பரிசு போன்றவையும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மண்ணெண்ணெய் சீனி துவரம் பருப்பு கோதுமை பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்தப் போவதாக வெளியாகி இருக்கும் செய்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு தரவேண்டிய நிதியை தாமதம் செய்து வருவதால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் அதனை ஈடு செய்வதற்கே துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகத்தை நிறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் பொருள்கள் ரேஷன் கடைகளில் வழங்குவது நிறுத்தப்பட்டால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி வரும் என்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Post

BREAKING NEWS | ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு.! ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.!

Fri Jan 12 , 2024
குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி எடுக்கும் சம்பவம் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்திய ராணுவ வாகனங்கள் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதிகளின் உச்சியில் இருந்து ராணுவ வாகனங்களை நோக்கி […]

You May Like