கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல புதிய நோய்கள் பரவி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் என்ணிக்கை அதிகரித்துள்ளது.. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/Fever-1-1024x683.jpeg)
இந்த சூழலில் H3N2 காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானது என்றும், அதன் அறிகுறிகள் நீடித்தால் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்.. இந்நிலையில் நிபுணர்கள் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர்.. டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் திரேன் குப்தா இதுகுறித்து பேசிய போது “ கோவிட் தொற்றுநோய் காரணமாக மக்கள் இரண்டு ஆண்டுகள் உள்ளே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. , இது மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியது. இதனால் தற்போது நாட்டில் H3N2 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது..
H3N2 காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸாவின் ஒரு சாதாரண துணை வகை , ஒவ்வொரு ஆண்டும் மக்களைப் பாதிக்கிறது.. இந்த ஆண்டு, கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் வைரஸிற்கான ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால், இந்த பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.. எனவே H3N2 வைரஸ் உயிருக்கு ஆபத்தானது அல்ல. அது எந்த வைரஸாக இருந்தாலும், இணை நோய்கள் இருந்தால், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம்…” என்று தெரிவித்தார்..
இந்தியாவில் H3N2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனவே பயப்பட தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் H3N2 வைரஸை தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று நிபுணர்கள் பரிந்துரைத்தாலும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.. சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை கழுவுதல், முக்கவசம் அணிவது, நெரிசலான இடங்களை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்..