fbpx

இது கார் ஆ இல்ல கப்பலா?? வியக்க வைக்கும் உண்மை..!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ, வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இன்விக்டோ காரின் புதிய டீசர் ஒன்றை, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், மாருதி சுஸுகி இன்விக்டோ பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன. இதன்படி மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் முன் பக்க க்ரில் அமைப்பின் மீது கிடைமட்டமான க்ரோம் பார் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 இன்ச் அலாய் வீல்களுக்கு புதிய டிசைனும் வழங்கப்படலாம். மேலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, வித்தியாசமான டெயில்லேம்ப்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர பம்பர்களும் சற்றே மாற்றியமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த வீடியோவில் டெயில்லேம்ப் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றின் டிசைன் தெளிவாக காட்டப்படவில்லை என்பதால், அவற்றை உறுதியாக கூற முடியவில்லை. ஒட்டுமொத்தத்தில் டிசைன் என்ற விஷயத்தை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இன்விக்டோ சற்றே வேறுபட்டிருக்கும். செயல்திறனை பொறுத்தவரை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போல் அல்லாமல், மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இதனுடன், இ-சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாருதி சுஸுகி இன்விக்டோ காரில் இந்த ஹைப்ரிட்-பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு, மாருதி சுஸுகி இன்விக்டோ போட்டியாக இருக்கும். அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடனும் இது போட்டியிடும். மாருதி சுஸுகி இன்விக்டோ காரின் விலை எவ்வளவு? மற்றும் என்னென்ன வசதிகள்? என்பது உள்பட நமது அனைத்து கேள்விகளுக்கும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தினமான ஜூலை 5ம் தேதி பதில் கிடைத்து விடும். இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிநவீன வசதிகளுடன், சொகுசான பயணம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு மாருதி சுஸுகி இன்விக்டோ மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

Maha

Next Post

இந்திய விமானப் படை-க்கு கிடைத்த புதிய சக்தி..!

Thu Jun 22 , 2023
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயக்கும் முன்னணி விமான எஞ்சின் சப்ளையரான GE ஏரோஸ்பேஸ் இன்று இந்திய விமானப் படையில் பயன்படுத்தும் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா ஆயுத உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை HAL உடன் இணைந்து அமெரிக்காவின் GE […]

You May Like