டெல்லி மெட்ரோவில் பிகினி உடை அணிந்து பயணம் செய்த ஒரு பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களால் மெட்ரோ பெண் என அழைக்கப்படும் இந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை ஆடைகளுடன் தொடர்ச்சியாக பயணம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அந்த பெண்ணை சமூக வலைதளங்களிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியா டுடே பத்திரிக்கை இவரை பேட்டி எடுத்திருக்கிறது.
அந்தப் பேட்டியின் போது இவரது பெயர் ரிதம் சனான தெரிய வருகிறது. இந்த பேட்டியில் பேசியிருக்கும் அவர் எனது விருப்பப்படி ஆடை அணிகிறேன் இதில் என்ன தவறு இருக்கிறது நான் ஃபேமஸாக வேண்டும் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யவில்லை. எனக்கு பிடித்த விஷயத்தை செய்கிறேன் அவ்வளவுதான். எனது நண்பர் ஒருவர் நீ பாலிவுட் நடிகை பார்த்து அவரைப் போல பிரபலமாக வேண்டும் என்று ஆடை அணிந்து இருக்கிறாயா? என கேட்கிறார். எனக்கு அந்த நடிகையை அவர் அறிமுகப்படுத்திய பின்பு தான் தெரியும். நானும் புலமைவாத குடும்பத்திலிருந்து வந்த பெண் தான். என்னுடைய வீட்டிலும் எதிர்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் எனக்கு இவ்வாறு ஆடை அணியத்தான் பிடித்திருக்கிறது என தெரிவித்துள்ளார். தனக்கு பிங்க்லையின் பகுதியில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். டெல்லி மெட்ரோ ரயிலில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க கூடாது என்ற கொள்கையை என்னுடைய விஷயத்தில் மட்டும் ஏன் டெல்லி நிர்வாகம் மறந்தது என்று தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். யார் என்ன சொன்னாலும் தனக்கு கவலை இல்லை என்று கூறி அந்த பெண் தனது விருப்பப்படி தான் ஆடை அணிவேன் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.