fbpx

ஆதார் எண்ணை மட்டும் பதிவிட்டால் போதும்? மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஈஸியான வழிமுறைகள்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்சாரத்துறை மும்முரமாக செய்து வருகிறது. இதில், ஆன்லைனில் ஏற்கனவே ஒரு லிங்க் வெளியிடப்பட்டு அதில் பயனர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர். அடுத்ததாக, மின்சாரத்துறை 2811 சார்பு அலுவலகங்களில் காலை 10.30 மாலை 5.30 மணி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து சனிக்கிழமைகள் உட்பட இணைக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக கொடுக்கப்பட்ட மின் இணைப்பு இணையதளங்கள் வாயிலாக மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வந்தனர். இந்நிலையில், அதில் சிரமம் இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தற்போது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் பதிவு செய்யப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் மின் இணைப்பு உரிமையாளர், வாடகைதாரர், உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்ற ஆப்சனுடன் 4-வதாக என்.ஆர்.ஐ. ஆப்சன் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியமானது வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் பயனர்களின் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகிறது. இதனுடன் பலர் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவதுடன், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது, ஆதார் எண்ணை எளிதாக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மின் நுகர்வு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்சா-வை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.

பின்னர் மின் நுகர்வு பயனர்கள்கள் பெயர் தோன்றும், அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதன்பின் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும். பின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்தால் போதும். உங்கள் ஆதார் மின்இணைப்புடன் இணைக்கப்பட்டு விடும். மிக எளிதாக ஆதாரை இணைத்து விடலாம்.

Kathir

Next Post

எங்கே செல்கிறது தமிழகம்? போதையில் ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது!

Thu Dec 8 , 2022
திருச்சி அருகே இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ்(31) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நாள்தோறும் கஞ்சா மற்றும் குடிபோறையில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது, அண்மையில் ஒரு நாள் இரவு இவர் தன்னுடைய குழந்தையின் அருகில் படுத்திருக்கிறார். சற்று நேரம் போன பிறகு குழந்தை அழுதிருக்கிறது. மகளின் சத்தத்தை கேட்ட தாய் அருகில் […]

You May Like