சமீப காலமாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வைரஸ் தொடர்ந்து, பரவுவதற்கான காரணம் என்னென்ன? என்று அந்த மாநில சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு, பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த நிபா வைரஸின் தாக்கம் கொரோனா தொற்றை விட அதிகரித்து காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கேரள மாநில மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இந்த நோயை எப்படி கட்டுப்படுத்துவது என்று சுகாதாரத்துறை ஒரு புறம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னொரு புறம் இந்த நிபா வைரஸ் எதற்காக தொடர்ந்து, வெளியாகி வருகிறது? இந்த நிபா வைரஸ் எதிலிருந்து உருவாகிறது? போன்ற ஆராய்ச்சியும் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பு ஏன் கேரளாவில் அதிகரித்து வருகிறது? என்பது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக, இதுவரையில் கேரள மாநிலத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, கேரள மாநிலத்தில் பல்வேறு கிராமங்கள் நோய் கட்டுப்பாட்டு மையம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், கேரள மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நடந்து சென்ற பாதைகளில், வேறு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கொரோனா தொற்றிற்கு கூட இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில், அந்த மாநிலத்தில் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆறு பேர் ஆளாகி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதோடு அந்த மாநிலத்தில் ,பல்வேறு பகுதிகளில், இருக்கின்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கேரள மாநில சுகாதார துறையும், மத்திய சுகாதார துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.