fbpx

”வீட்டுக்குள்ள யாருப்பா அது”..? திருடன்போல் வெளியே வந்த கணவர்..!! கூடவே வந்த பார்வதி..!! மனைவி ஷாக்..!!

கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கிய வழக்கில் கள்ளக்காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கூலித்தொழிலாளியான சேகர் என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த பார்வதி என்ற பெண்ணுடன் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று சேகர் தனது வீட்டிற்கு பார்வதியை அழைத்து வந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, வெளியே சென்று வீடு திரும்பிய சேகரின் மனைவி சந்திரா, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தன்னுடைய கொழுந்தனார் தனசேகரனை அழைத்து, இருவரும் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர்.

இதையடுத்து, வீட்டிற்குள் இருந்து சேகர் அவருடைய கள்ளக்காதலியுடன் வெளியே வந்த நிலையில், இதனை பார்த்து சந்திராவும், தனசேகரனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இருவரும் சேகரை கண்டித்த நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சேகர், மனைவி மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தனசேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசில் அளித்த புகாரைத் தொடர்ந்து சேகர் மற்றும் கள்ளக்காதலி பார்வதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read More : ராஷ்மிகா, கத்ரினாவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையின் ஆபாச வீடியோ..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

A case has been registered against the counterfeiter couple in the case of assaulting the wife and younger brother of the counterfeiter.

Chella

Next Post

ஜெட் வேகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ’மகாராஜா’..!! 7 நாட்களில் இத்தனை கோடியா..?

Fri Jun 21 , 2024
In this post we will see how many crores the Vijay Sethupathi starrer 'Maharaja' has collected in a week.

You May Like