மத்திய அரசு சார்பில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 பணம் செலுத்தப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது..
மக்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பணம், கடன், மானியம் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்கும் அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய அரசாங்கத்தின் புதிய முன்முயற்சி என்று கூறப்படும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது… பிரதமரின் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பெண்களின் வங்கிக் கணக்கில் 9,000 ரூபாய் செலுத்தப்படும் என்று என யூடியூப்பில் வீடியோ செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. ‘விகே ஹிந்தி வேர்ல்ட்’ என்ற யூடியூப் வீடியோ சேனலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது… மேலும் அந்த வீடியோவில், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது..
இந்நிலையில் இந்த செய்தி போலியானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. மேலும் இதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இந்திய பத்திரிக்கை தகவல் பணியகமான PIB இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.. அந்த பதிவில் “ விகே ஹிந்தி வேர்ல்ட்’ என்ற யூடியூப் வீடியோ சேனலில், மத்திய அரசு சார்பில் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளதாகவும், வங்கிக் கணக்கில் ரூ.9,000 பணம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் இந்த செய்தியின் உண்மையைச் சரிபார்த்தபோது, இந்தக் கூற்று தவறானது என்று கண்டறியப்பட்டது. மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை..” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் வந்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம்.. அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதை சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு அந்த செய்தியை அனுப்ப வேண்டும். நீங்கள் உண்மைச் சரிபார்ப்புக்கு +918799711259 என்ற WhatsApp எண்ணுக்கு செய்தியை அனுப்பலாம். அதே போல் உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலை https://pib.gov.in என்ற இணையதளத்திலும் சரிபார்க்கலாம்..