fbpx

மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா..? உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பு அளித்த பதில்..

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது..

இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்.. இதனிடையே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..

இதற்கிடையே, பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த சூழலில், இந்த வழக்கில் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று அதிமுக தலைமை நிலையம் சார்பில் புதிய கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது..

இந்நிலையில் இன்று இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பாக எத்தனை பதிவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.. மேலும் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு இருதரப்பினரும், மீண்டும் இணைய வாய்ப்பில்லை இல்லை என்று பதிலளித்தர்..

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று ஓபிஎஸ் தரப்பு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. அப்போது கட்சியின் அடிப்படை விதிகளை மீறி அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டது என்று ஓபிஎஸ் தரப்பு பதிலளித்தது.. அதிமுக பொதுக்குழு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதிகள் அறிவுறித்தினர்…

Maha

Next Post

வேகமெடுக்க தொடங்கிய ’மெட்ராஸ் ஐ’..! கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுரை..!

Fri Jul 29 , 2022
’மெட்ராஸ் ஐ’ ஒரு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் வர அதிக வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவுகிறது. மருத்துவமனைகளில் தினமும் குறைந்தபட்சம் 50 பேர் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாகத்தான் மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இதுகாற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவுகிறது. கண் […]

You May Like