அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையத்தின் தண்டவாள இணைப்புகளில் உள்ள நட்டுகள் கழட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் கூட்டியே பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்க சதித் திட்டமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகள் கலக்கப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்புகளில் இருந்த போல்ட்டுகள் கழற்றப்பட்டு கிடந்தன. சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் போல்ட் கழற்றி இருந்ததால் ரயிலை கவிழ்க்க சதியா என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் போல்ட்டுகள் கழற்றப்பட்டதால் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் தண்டவாளத்தில் சட்டவிரோதமாக நடந்து செல்வது, ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்துவது அல்லது ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களுக்கு தண்டனை உண்டு. இதற்கான தண்டனைகள் ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சட்டவிரோதமாக கடப்பது, ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற செயல்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.