சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தலையில்லா நபர் ஒருவர் காவலாளி உடையணிந்து அமர்ந்திருப்பது போன்ற வீடியோ பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது.
சில சமயங்களில் இணையத்தில் வெளியாகும் புகைப்படங்கள் நம்மை , இது எப்படி சாத்தியமாகும் என்ற குழப்பத்தையும் நமக்கு ஏற்படுத்தும். இதோ அப்படியொரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் rajsinghmedia_123 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில் ஒரு மனிதர் தலை இல்லாமல் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்கமுடியும்.
அதாவது, அந்த நபர் ஒரு காவலாளி போல ஆடைகளை அணிந்திருப்பதை புகைப்படத்தில் காணலாம். புகைப்படத்தைப் பார்த்தால், அவர் ஒரு கடைக்கு காவலாக இருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது. ஆனால் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், புகைப்படத்தில் அவரது தலையை காண முடியவில்லை. அவர் தலை எங்கே? இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.