விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்னர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஈரமான ரோஜாவே தொடரில் திரவியம் மற்றும் பவித்ரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள். இந்த தொடரும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அதன் பிறகு அதே பெயரில் இரண்டாம் பாகம் ஆரம்பமானது. இதிலும் திருமணம் செய்ய போகும் ஜோடிகள் மாற்றப்பட்டு அதை வைத்து கதைக்களம் நகர்ந்து வருகிறது.
சமீபத்தில் இந்த தொடரில் ஜீவா வேடத்தில் நடிக்கும் திரவியம் ஒரு புதிரான பதிவை வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பிரியா வெளியேறுகிறாரா? அதனால் தான் இவர் இப்படி பதிவு போடுகிறாரா? என்று கேள்வி எழுப்பினர்.

ஆனால் அந்த செய்திகளில் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. அது வெறும் வதந்தி மட்டுமே என்று சொல்லப்பட்ட நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் சுவாதி தன்னுடன் நடிக்கும் திரவியத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.