விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நெடுந்தொடர்களுமே சூப்பர் ஹிட் நெடுந்தொடர்கள்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. அந்த தொடரில் பாக்கியலட்சுமி கணவரால் கைவிடப்பட்ட பெண்மணிகள் துவண்டு போகாமல் எவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை காட்டும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார்.
அதேநேரம், தற்சமயம் அந்த தொடரின் கதையில் எழில் அமிர்தா அல்லது வர்ஷினி இருவரில் யாரை திருமணம் செய்து கொள்வார்? என்று இதுவரையில் தெரியவில்லை. அதேபோல 70 லட்சம் ரூபாயை கொடுத்து வீட்டை எழில் மீட்பாரா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
சமூக வலைதளங்களிலும் எழிலின் திருமண காட்சிகள் படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றனர்.தற்சமயம் எழக்கூடிய மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா அந்த தொடரில் இருந்து வெளியேறுவதாகவும், அவருக்கு பதிலாக இனி ராதிகாவாக நடிகையும் பிக் பாஸ் பிரபலமான வனிதா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.