fbpx

சென்னையில் திடீர் கனமழைக்கு இதுதான் காரணமா??

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து நேற்று முன்தினம் வரைக்கும் சென்னை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்பட்டது. இந்த மழைக்கு காரணம் தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மேலடுக்கு சுழற்சி. இந்நிலையில்தான் தெற்கு வங்கக் கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது. அங்கிருந்து வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீச ஆரம்பித்தது. இதன் காரணமாக மேலடுக்கு சுழற்சியில் இருந்த மழை மேகக்கூட்டம் நகர்ந்து கடலோர மாவட்டங்களுக்கு மழையை கொடுத்திருக்கிறது. தற்போது சென்னையில் பெய்துவரும் மழைக்கு இதுதான் காரணம்.

நேற்று இரவு தொடங்கிய மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. தற்போது வரைக்கும் விட்டுவிட்டு மிதமான மழையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2-3 மணிநேரத்துக்கு மழை நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருசில இடங்களில் மிதமான மழையாகவும், ஓரிரு இடங்களில் கனமழையாகவும் பெய்திருக்கிறது. பல இடங்களில் மழையால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

Maha

Next Post

12-ம் வகுப்பில் 546 மதிப்பெண்கள் எடுத்தும் கூலி வேலைக்கு செல்லும் நிலை

Mon Jun 19 , 2023
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளிதான், வேல்முருகன் என்பவர். இவரது மகள் நந்தினி. அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நந்தினிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. பெற்றோருக்கும் கல்வி விழிப்புணர்வு இல்லாததால் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது தாமதமானது. இறுதி கட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்ததால் மதுரை அரசு மீனாட்சி […]

You May Like