fbpx

சென்னையில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…!

சென்னையில் கிண்டி, தியாகராய நகர், புரசைவாக்கம், கொளத்தூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாத லேசான மழை பெய்து வருகிறது. கனமழையால் நேற்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். மேலும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது. தொடர்ந்து, விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்றுள்ளது. இது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் டிச. 2-ம் தேதி புயலாக வலுப்பெறும். இதனால், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் 2, 3-ம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Vignesh

Next Post

"டக்குன்னு சுறுசுறுப்பாக..." 5 நிமிடத்தில் செய்யக்கூடிய சிம்பிள் எனர்ஜி ட்ரிங்க்.!

Fri Dec 1 , 2023
நாம் அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவோம். அலைச்சல் காரணமாக பல நேரங்களில் அதிகப்படியான சோர்வு ஏற்படும் இந்த சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கு சுவையான மற்றும் எளிமையான இந்த ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த எனர்ஜி ட்ரிங்க் செய்வதற்கு 1 இன்ச் அளவிற்கு இஞ்சி துண்டு, 1/4 கப் புதினா இலைகள், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் எடுத்துக் கொள்ள […]

You May Like