பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது 72 வயதாகிறது.. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்த மோடி தயாராகிவிட்டார்.. எனவே அடுத்த ஆண்டு தேர்தலிலும் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.. ஆனால் 2029-ம் ஆண்டில் மோடிக்கு 78 வயதாகிவிடும்.. பாஜகவின் கொள்கை படி, 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது.. எனவே வயது காரணமாக மோடி பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை எனில், அவருக்குப் பின் யார் வருவார்கள் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.. உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பலரின் பெயர்கள் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகின்றன.. மேலும் அவர் பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறார் என்றும் கூறப்படுகிறது..
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர் “ நான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை.. மாநிலத்தில் தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்.. எனக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை.. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிகப்பெரிய பலம்.. பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டிற்கு புதிய அடையாளம் உருவாக்கப்பட்டது.. மோடி அரசின் கொள்கைகளால் கடந்த 9 ஆண்டுகளில் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனர்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது.. இந்த பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது..” என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பான்மை பெறும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்தார். 2019 தேர்தலை காட்டிலும் 2024ல் உத்தரபிரதேசம் பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்கும் என்றார். 2024 தேர்தலில் பாஜக தனித்து 300 முதல் 315 இடங்களைப் பெறும் என்றும் அவர் கூறினார். சனாதன தர்மம் பற்றிய கேள்விக்கு, பதிலளித்த யோகி ஆதித்யநாத் சனாதன தர்மம் இந்தியாவின் ஆன்மா மற்றும் அடையாளம் என்று கூறினார். சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்றும் கூறினார்..