கூகுள் ட்ரான்ஸ்லேட் செயலியை பயன்படுத்தி ஹேக்கர்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுகிறார்கள் என்று Barracuda Networks நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொழி தெரியாதவர்கள் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு அர்த்தம் தேவை என்றால் அனைவரும் கூகுள் டிரான்ஸ்லேட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், கூகுள் ட்ரான்ஸ்லேட் இணைய இணைப்புகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் சிலருடைய தனிப்பட்ட தகவல்களை தேடி வருவதாகவும் அதன் மூலம் அவர்களுடைய வங்கி கணக்கு மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து Barracuda Networks நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஃபிஷிங் தாக்குதல் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின்போது ஹேக்கர்கள் சில புதிய உத்திகளை கையாண்டு வருவதை கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தவிர்க்கவும் தங்கள் முயற்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, கூகுள் ட்ரான்ஸ்லேட் சேவையை பயன்படுத்தும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு ஹேக்கர்கள் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அந்த மின்னஞ்சலில் ஒரு ஃபிஷ்ஷிங் லிங்கை அனுப்பி போலியாக உருவாக்கப்பட்ட பக்கங்களின் லிங்க்கை அனுப்புகின்றனர் அந்த பக்கத்தின் மூலம் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் போலவே ட்ரான்ஸ்லேட் செய்யலாம் என மெசேஜ் அனுப்பப்படுகிறது. இந்த இணையதளத்தை உண்மை என நம்பி அதை பயன்படுத்த அந்த லிங்கை கிளிக் செய்தால் உடனடியாக அவர்களுடைய கம்ப்யூட்டர் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அதன் பிறகு அவர்கள் வெகு எளிதாக அவர்களின் வங்கி கணக்கை தெரிந்து கொண்டு மோசடி செய்வதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மின்னஞ்சல் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் மூலம் மோசடி செய்து வருவதை ஹேக்கர்கள் வழக்கமாக்கி வருகின்றனர். எனவே கூகுள் ட்ரான்ஸ்லேட்டை பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.