fbpx

அடுத்த சாதனை படைக்கப்போகும் இஸ்ரோ..!! சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா – எல்1..!! எப்போது விண்ணில் பாய்கிறது..?

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா – எல்1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இஸ்ரோ, சூரியன் குறித்த ஆய்வில் ஈடுபடவுள்ளது. இதற்காக ஆதித்யா- எல்1 விண்கலத்தை இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆதித்யா- எல்1 விண்கலம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்ள உள்ளதால், இதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான ‘லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்’-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் ”லெக்ரேஞ்சியன் புள்ளி 1-ல் இது நிலைநிறுத்தப்பட உள்ளது.

4 மாத கால பயணத்திற்குப் பிறகு இந்த விண்கலம் அதன் சுற்றுப்பாதையில் நுழையவுள்ளது. சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கு இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் 4-வது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்கள் சூரியன் குறித்த ஆய்வுக்கான விண்கலங்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 29 பேர் பலி….!

Mon Aug 14 , 2023
தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பரவலாக மழை பெய்து வந்தாலும் கூட, வெள்ளம் வரும் அளவிற்கு மழைப்பொழிவு இல்லை. ஆனால், மற்ற மாநிலங்களில் மழை வெளுத்து வாங்குவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சோலன் மாவட்டம், […]
புரட்டி எடுக்கும் கனமழை..!! வரும் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

You May Like