fbpx

தரையிறங்கிய பிறகு லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படம் இஸ்ரோ வெளியீடு…

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கிய பிறகு லேண்டிங் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இஸ்ரோவின் பதிவில் “லேண்டிங் இமேஜர் கேமரா
தரையிறங்கிய பிறகு படம் பிடித்தது. இது சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தின் ஒரு பகுதியைக் காட்டுகிறது. ஒரு கால் மற்றும் அதனுடன் இணைந்த நிழல் கூட பார்க்கப்படுகிறது. சந்திரயான்-3 சந்திர மேற்பரப்பில் ஒப்பீட்டளவில் சமதளமான பகுதியைத் தேர்ந்தெடுத்தது” என்று பதிவிட்டுள்ளது.

Kathir

Next Post

கோரத்தாண்டவம் ஆடிய ஹவாய் காட்டுத்தீ!… ரெட் ஹவுஸ் எனும் ஒரேயொரு வீடு மட்டும் தப்பித்தது எப்படி?… அதிசயமும்! ஆச்சரியமும்!

Thu Aug 24 , 2023
ஹவாய் காட்டுத் தீயில் இருந்து தப்பிய ரெட் ஹவுஸ்” என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது எப்படி சாத்தியம் என்றும் பலர் ஆச்சரியமடைந்துள்ளனர். ஹவாயின் Maui பகுதிகளில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீயில் 100 க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இருப்பினும், லஹைனாவில் உள்ள ஒரு தேவாலயம் தீப்பிழம்புகளில் இருந்து தப்பியது, அதைச் சுற்றியுள்ள […]

You May Like