fbpx

இந்தியாவிலும் வந்துவிட்டது!… இன்ஸ்டா, ஃபேஸ்புக் செயலிகளுக்கு ப்ளூ டிக் சந்தா!… கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக் சந்தா இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற மாதம் ரூ.699 கட்டணமாக பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பயனர்கள் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிற்கான ப்ளூடிக்கை பெற உதவும் கட்டண சலுகையை மெட்டா நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்தியாவிலும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இந்த ப்ளூ டிக் பெற மாதத்திற்கு ரூ.699 ஆகவும், இணையத்தில் ரூ.599 ஆகவும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ட்விட்டர் தனது ‘ப்ளூ’ டிக் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட ப்ளூ டிக் பெற மெட்டாவின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். பயனர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் சுயவிவரம் அடங்கிய பெயருடன் பொருந்தக்கூடிய அரசாங்க ஐடியையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் சில பயனர்கள் செல்ஃபி வீடியோவை வழங்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியல்!... முதலிடத்தில் நியூயார்க்!... இந்தியாவில் எந்த நகரமும் இடம்பெறவில்லை!

Thu Jun 8 , 2023
உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. முதல் 20 இடங்களில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை. 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் செலவுமிக்க (Most Expensive Cities) நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதே […]

You May Like