fbpx

புதிய அறிவிப்பு…! பிஎட் அட்மிஷன் தொடக்கம்… வரும் 8-ம் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…! முழு உள்ளே…!

பிஎட் படிப்பில் சேர்வதற்கு வரும் 8-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகம் பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு தொலைநிலை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 24-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. தமிழ்நட்டில் 2000-ம் ஆண்டு முதல் பி.எட், சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலையில் நடத்திவரும் ஒரே பல்கலைக்கழகம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகும்.

பிட்எட் படிப்பானது பல்கலைககழக மானியக் குழு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. பிஎட் பட்டத்திற்கு இணையானது என தமிழ்நாடுஅரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்படிப்பை முடிப்பவர்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இப்படிப்பை அரசு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அந்துள்ள கல்வி மையங்கள் மூலம் நடத்தி வருகிறது. 2003-ம் ஆண்டிற்கான பிஎட் சிறப்புக் கல்வி பட்டம் படிப்பிற்கான ஆன்லைன் மூலம் வரும் 8-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டினை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24306017 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இடி மின்னலுடன் கூடிய கனமழை...! 55 கி.மீட்டர் வேகத்தில் பலமான காற்று வீசும்...! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..‌‌.!

Thu Feb 2 , 2023
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது. இது […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like