கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 680 இடங்களில் சேர இதுவரை சுமார் 20,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. NRI மாணவர்கள் வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், திருத்தம் மேற்கொள்ளவும் https://adm.tanuvas.ac.in இணையதளத்தை அணுக வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.