fbpx

இறுதி வாய்ப்பு… 20,000 காலியிடங்கள்…! SSC Group B மற்றும்‌ C பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!

SSC – CGL தேர்வுக்கு இன்று மாலைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக இன்று மாலைக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ 01.01.2022 அன்றைய நிலையில்‌ Sc,St பிரிவினர்‌ 35 வயதுக்குள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 33 வயதுக்குள்ளும்‌ மற்றும்‌ பொதுப்பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேதர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீடிப்பு செய்யப்படாது என்பதால், இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அமலுக்கு வந்தது அதிரடி தடை...! மீறினால் அபராதம் + 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்...! தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு..‌.!

Sat Oct 8 , 2022
ஆன்லைன் ரம்மியை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்; சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் தலைமையில் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படும். ஆணையத்தின் உறுப்பினர்களாக IT வல்லுநர், உளவியல் நிபுணர், ஆன்லைன் விளையாட்டு வல்லுநர் ஆகியோர் இருப்பார்கள். மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்குவது, தொடர்ந்து கண்காணிப்பது, தரவுகளை […]

You May Like