fbpx

வெங்காயத்த விடுங்க.. 1 கிலோ பூண்டு ரூ.550.. எகிறி அடித்த முருங்கக்காய் விலை..!!

நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது.. ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய் கடந்து விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையிலும், கதிகலங்கியும் போயுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நடுத்தர மற்றும் எளிய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தற்போது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக  பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால், தற்போது காய்கறிகளின் விளைச்சல்கள் பெரிதளவில் பாதிப்பு அடைந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முருங்கைக்காய் மற்றும்  பூண்டின்  விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் முருங்கைக்காய் நேற்று வரை 1 கிலோ ரூ.250 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று கிலோவிற்கு ரூ.100 உயர்ந்து, மொத்த விலைக்கு  1 கிலோ ரூ. 350 ரூபாயாகவும் மற்றும் சில்லறை விலைக்கு ரூ.380 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சந்தையில் இன்று பூண்டின் விலை 1 கிலோ ரூ.450 ரூபாயாகவும் மற்றும் புறநகர் பகுதிகளில் 1 கிலோ ரூ.550 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் இன்று கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரே நாளில் ரூ.20 அதிகரித்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Read more ; மின்சாரம் தாக்கி பலியான பம்ப் ஆபரேட்டர்கள்.. பல மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரல!! – வேலூரில் சோகம்

English Summary

It has been reported that the prices of drumsticks and garlic have increased dramatically in Tamil Nadu today.

Next Post

கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Thu Nov 28 , 2024
Mazagon Dock Shipbuilders Limited has announced a recruitment notification. It has been announced that 234 vacancies for Non-Executive posts will be filled.

You May Like