உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் பெறுவார் என அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பொழுது அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.
![எனது காரை எடுத்துச் செல்லுங்கள்.. ஆனா கமலாலயம் மட்டும் போயிறாதீங்க..! ஓபிஎஸ்-எடப்பாடியை சாடிய உதயநிதி](https://1newsnation.com/wp-content/uploads/2022/04/Udhayanidhi-1024x629.jpg)
வருகின்ற தேர்தலில் இளைஞர்களை தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்பொழுது தமிழக முழுவதும் திமுக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் விளையாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகிய இரண்டு துறைகளையும் கவனித்து வருகிறார். இதில் விளையாட்டு துறையை பிரித்து உதயநிதியிடம் ஒப்படைத்தால் இளைஞர்கள் மத்தியில் உதயநிதி செல்வாக்கு இன்னும் அதிகரிக்க கூடும் என்பதே திமுகவின் முக்கிய திட்டமாக உள்ளது.
இதனால் இம்முறை உதயநிதிக்கு அந்த துறையை அளிக்கும் போது தமிழ்நாடு முழுக்க அவரால் பயணம் மேற்கொண்டு இளைஞர்களை தங்கள் பக்கம் கொண்டு வர முடியும் என்று தலைமை எதிர்பார்க்கிறது. இது அவரது எதிர்கால அரசியல் பயணத்துக்கு இது மிகவும் உதவி புரியும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் மத்தியில் ஒரு கணக்கு ஓடி கொண்டிருகிறது. எனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல கட்சியில் நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத் துறைக்கு பதிலாக வருவாய்துறையும், அமைச்சர் ராமமூர்த்திக்கு கூட்டுறவுத்துறை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.