அசாம் மாநிலத்தில் முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், அவருக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படுவதுடன், இந்த குற்றத்திற்காக அபராதங்களும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள, மதம் அனுமதித்தாலும், மாநில அரசின் அனுமதி தேவை என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். ஒரு மதம் உங்களை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதித்தாலும், நீங்கள் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும்” என்று கூறினார். ஊழியர்களின் மரணத்திற்குப் பிறகு, கணவரின் ஓய்வூதியத்திற்காக இரு மனைவிகளும் சண்டையிடும் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசியல் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.
1965 முதல் ஏற்கெனவே மத்திய அரசின் பணியாளர்களுக்கு உள்ளது. இதேபோல், பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிலும் உள்ளன.இந்துமதச் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்த சட்டம், அனைத்து இந்துக்களுக்கும் பொருந்தும். சிறுபான்மை தனிச்சட்டங்கள் காரணமாக முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.