fbpx

‘கட்சி ஆரம்பித்தால் மட்டும் போதாது’..!! ’கொள்கையை அறிவிக்கல’..!! ’சினிமாவில் நல்ல நடிகராக இருந்தால் அரசியலில் ஜெயித்து விட முடியாது’..!! கி.வீரமணி கருத்து..!!

ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே கொள்கையையும் அறிவிக்க வேண்டும். இது தான் நடைமுறை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் முதல் நாள் பயிற்சி நேற்றைய தினம் தொடங்கியது. இதில், இன்று கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நீட் தேர்வு குறித்து யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில், விஜய் அரசியலுக்கு வரவும், நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கவும் அனைத்து உரிமையும் உண்டு.

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால், சினிமாவில் நடித்து நல்ல நடிகராக இருந்தாலே அரசியலில் ஜெயித்து விட முடியாது. எம்.ஜி.ஆர் அரசியலில் ஜெயித்தார் என்றால், அவர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்தார். நடிகராக இருந்ததால் மட்டுமே எம்.ஜி.ஆர் ஜெயிக்கவில்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த எந்த நடிகரும் அரசியலில் ஜெயிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே கொள்கையையும் அறிவிக்க வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால், இப்போது கட்சி ஆரம்பிக்கிறேன். பிறகு கொள்கையை அறிவிக்கிறேன் என்பது மிகவும் முரண்பாடாக உள்ளது. மற்றபடி விஜய் மட்டுமல்ல நல்ல கருத்தை யார் கூறினாலும் வரவேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ”தமிழ்நாட்டில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை”..!! ”கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடுகிறது”..!! அண்ணாமலை பாய்ச்சல்..!!

English Summary

A party should declare its policy at the time of its inception. K. Veeramani said that this is the practice.

Chella

Next Post

’10 வருஷமா ஒரே ரூம்ல அப்படி இருந்தோம்’..!! ’இப்போ வேற ஒருத்திக் கூட இருக்காரு’..!! பிரபல நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

Sat Jul 6 , 2024
Raj Tarun is a popular actor in Telugu cinema. A woman named Lavanya filed a complaint against him at the police station.

You May Like