fbpx

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏசி கோச்சில் வர வெறும் 4 ரூபாய் தான்.. வைரலாகும் ரயில் டிக்கெட்..

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த ரயில் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் 1947-ம் ஆண்டில் இருந்த ரயில் டிக்கெட்டின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.. அன்றைய காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி – இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் இடையே 9 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.. அப்போது 9 பேரின் டிக்கெட்டுக்கு 36 ரூபாய் 9 அணா மட்டுமே வசூலிக்கப்பட்டது அந்த டிக்கெட் மூலம் தெரியவந்துள்ளது.. அதன்படி தலா ஒரு நபருக்கு வெறும் 4 ரூபாய் மட்டுமே வசூலிக்கபட்டது. இந்த டிக்கெட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. நெட்டிசன்கள் அந்த டிக்கெட்டை இன்றைய டிக்கெட் விலையுடன் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்..

இந்த ரயில் டிக்கெட் Pakistan Rail Lovers என்ற பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.. அந்த பதிவில் “ சுதந்திரத்திற்குப் பிறகு 17-09-1947 அன்று 9 நபர்களுக்கு, ராவல்பிண்டியில் இருந்து அமிர்தசரஸ் வரை பயணம் செய்ய 36 ரூபாய் & 9 ஆணங்கள் செலவழிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் படம். ஒருவேளை ஒரு குடும்பம் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருக்கலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

Maha

Next Post

5 மாதங்களாக 3 ஆண் நண்பர்களுக்கு பலியான மாணவி..!

Sun Jan 22 , 2023
டெல்லி மாநகர பகுதியில் உள்ள நொய்டாவில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 5 மாதங்களாக தனது நண்பர்கள் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக பதிவுசெய்து மாணவியின் நண்பர்கள் வைத்துள்ளனர். இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.  அத்துடன், மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக நண்பர்கள் மிரட்டியுள்ளனர். […]

You May Like