தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வருவது தான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி இருப்பதற்கு அண்டை மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி கொண்டு வரப்படுவதுதான் காரணம் என்று தமிழக மக்களின் விதிவசத்தால் சட்ட மந்திரியாக வலம் வரும் ரகுபதி வாக்குமூலம் அளித்திருப்பது வெட்கக்கேடானது.
அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் ஆந்திரா-விலிருந்து எரிசாராயமோ, சாராயமோ, கள்ளச்சாராயமோ தமிழகத்திற்கு கடத்திக் கொண்டு வரப்படுகிறது என்றால், அதை தடுக்காமல் இந்த விடியா திமுக ஆட்சியின் காவல்துறையினர் சோதனைச்சாவடிகளில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? அவர்களின் கைகளை கட்டிப்போட்டது யார்..? ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த கடத்தலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுவதில் நியாயமிருப்பதாக தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் மரணம் அடைந்தது குறித்த எனது கருத்துக்கு முக்கி முனகி மூன்று பக்கம் பதிலளித்துள்ள சட்ட மந்திரி, புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்து அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்று வாக்குமூலம் அளித்திருப்பது, ‘தன் சட்டையை தானே கிழிப்பது போல்’, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சரின் துறையை குறை கூறியிருப்பது நகைச்சுவையானது என தெரிவித்துள்ளார்.