fbpx

”தமிழ்நாட்டில் அது இருக்கவே கூடாது”..!! ”உடனே தடை பண்ணுங்க”..!! முதல்வருக்கு பறந்த கடிதம்..!!

சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு 08.09.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் விளைவாக இந்த சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

சீன லைட்டர்களுக்கு தடை விதித்தாலும், வடநாட்டு நிறுவனங்கள் லைட்டர் மூலப் பொருள்களை இறக்குமதி செய்து தயாரிக்கின்றனர். குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கடிதம் எழுதியுள்ளார்.

Read More : ’அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு’..!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Legislative Assembly Speaker Appavu has written a letter to Chief Minister Mukherjee Stalin asking that Chinese plastic cigarette lighters should be banned in Tamil Nadu.

Chella

Next Post

வீட்டில் விளக்கேற்றுவதால் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமா..? சரியான நேரம் எது..?

Thu Aug 1 , 2024
By lighting a lamp in the house, our karmic reactions are removed. God's grace is easily available. All obstacles in life will be removed.

You May Like