fbpx

‘நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்’ 13 வயது சிறுமியுடன் எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்..!! – பகீர் பின்னணி

13 வயது சிறுமி தனியார் விடுதியில் 17 வயது சிறுவனுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது.

சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பொத்தேல் நகரில் பாட்டியுடன் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் நீலாங்கரை காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். பள்ளி அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த மாணவி சுமார் ஒரு மணி நேரம் ஒரு சிறுவனுடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. சிறுவன் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுவன் திருவான்மியூர் அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்ற போது அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர்.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குடும்ப சூழலுக்காக அவர் வீட்டு அருகே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சிறுமி பார்ட் டைம் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். பள்ளி முடிந்து இருவரும் பேசிக்கொண்டிருந்த போது நாம் எங்காவது போய் திருமணம் செய்து கொண்டு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என சிறுவன் அழைத்துள்ளான். சிறுமி பெற்றோர் இல்லாமல் பாட்டியுடன் வசிந்து வந்த நிலையில், சிறுவனின் பேச்சை நம்பி அவனுடன் சென்றுள்ளார். சிறுவனுடன் பணிபுரிந்த ஒருவர் இருவரையும் காலையில் ரயில் ஏற்றி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வட மாநில சிறுவனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Read more ; சாலையோர வாகனங்களால் இடையூறு? இனி இத செய்ங்க.. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!!

English Summary

It was revealed that a 13-year-old girl was staying with a 17-year-old boy in a private hostel. During the investigation, it was revealed that the two fell in love and the girl was sexually harassed.

Next Post

அனுமதி இல்லாமல் கட்டிய கட்டடம்... 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு...! வீட்டு வசதி துறை உத்தரவு...!

Tue Sep 3 , 2024
Unauthorized educational institution building... 6 months extension of time

You May Like