fbpx

18 வயது பெண் இத்தாலியில் கௌரவ கொலை.! பெற்றோருக்கு ஆயுள் தண்டனை.! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

இத்தாலி நாட்டில் வசித்து வந்த பாகிஸ்தான் தம்பதியின் 18 வயது மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது இத்தாலி நீதிமன்றம்.

பாகிஸ்தானை சேர்ந்த ஷபார் அப்பாஸ் என்ற நபர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இத்தாலியில் உள்ள ரெஜியோ எமிலியா நகரில் உள்ள பண்ணையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரது மகள் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தங்களது 18 வயது மகளான சம்னா அப்பாஸ் என்பவரை ஷபார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் கௌரவக் கொலை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஷபார் அப்பாஸ் அவரது மனைவி மற்றும் மைத்துனர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று இத்தாலி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஷபார் அப்பாஸ் மற்றும் அவரது மனைவிக்கு ஆயுள் தண்டனையும் அவரது மைத்துனருக்கு 14 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறார் நீதிபதி. இந்த கவுரவ கொலை சம்பவம் இத்தாலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Post

மீண்டும் லாக்டவுன்?… பள்ளிகள், ஹோட்டல், பப்களுக்கு அதிரடி உத்தரவு!... அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு, மரணங்கள்!

Thu Dec 21 , 2023
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் அச்சத்தில் உள்ளன. உலக நாடுகளை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் பலவற்றில் JN1 ஜே.என்.1 என்கிற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளாவில் இந்த புதிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா மரணங்கள் […]

You May Like