வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது.
ஆன்லைன் முறையில் ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர், இ-வெரிஃபிகேஷன் செய்வது கட்டாயமாகும். இது இல்லாமல், ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையானதாக கருதப்படாது. ஒரு வேளை தாக்கல் செய்தால் அது செல்லாது. மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கண்டறியவே, புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்துள்ளது வருமான வரித்துறை.
வரி மற்றும் வருமானம், செலவுக்கான கணக்குகள் குறித்த விவரங்கள் அனைத்தும், கடந்த காலங்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பதால், தவறான கணக்கு காட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் இருந்து வந்தது. இதனால், “இ – வெரிஃபிகேஷன்” என்ற ‘சாப்ட்வேர்’ ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, 2021-22ம் ஆண்டில் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவு – செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டதில், ஆயிரக்கணக்கான வருமான வரி கணக்கு தாக்கல் தவறான முறையில் செலுத்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.