Fan speed: கோடை வெயில் கொளுத்தும் வேளையில், வீட்டில் ஏசி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சீலிங் ஃபேன் கட்டாயம் இருக்க வேண்டும். இது நமது உடலை ஓரளவுக்கு குளிர்ச்சி படுத்த அவசியமான ஒன்று. இருப்பினும் மின்விசிறியை நாம் முறையாக பராமரிக்காததால், அது மெதுவாகவே சூழலும். நீங்களும் அதை வேகமாக சுழல வைக்க ஏதேதோ செய்வீர்கள், ஆனால் எதுவும் சரிப்பட்டு வராது.
சீலிங் ஃபேனின் வேகத்தைக் கூட்டுவதற்கு முன்பு முதலில் அதை சுத்தம் செய்யுங்கள். அதில் படிந்து கிடக்கும் தூசியை துடைத்தாலே ஓரளவுக்கு நன்றாக சுற்ற ஆரம்பிக்கும். எனவே அவ்வப்போது ஃபேனை நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஃபேனை சுத்தம் செய்வதற்கு முன்பு மின் இணைப்பை துண்டித்து விட்டு, துணி பயன்படுத்தி அதன் இறக்கை மற்றும் மோட்டாரை சுத்தம் செய்யலாம். இது அதன் இயக்கத்தை சற்று அதிகரிக்கும்.
மின்விசிறியின் பிளேடுகள் மீது நாம் கவனம் செலுத்துவதில்லை. மின்விசிரி மெதுவாக சுற்றுவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே மின்விசிரி வளைந்தோ, நெளிந்தோ இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
ஃபேன் வேகமாக சுற்றுவது இல்லை என்றால், அதற்கு கண்டென்ஸர் (condenser) போயிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கண்டென்ஸ்ரை மாற்றினால் ஃபேன் ஃபுல் ஸ்பீடில் சுற்றும். 2.5 எம்.எஃப்.டி கண்டென்ஸர் வாங்கி நாமே எளிதில் மாட்டிவிட முடியும். ஃபேனின் மோட்டாருக்கு மேலே சிறிய டப்பா போல இருக்கும். அதில் இணைக்கப்பட்டு இருக்கும் வயரை கழற்றி புதிய கண்டென்சரை வாங்கி அதில் மாட்டி விட்டால் போதும்.. இப்போது உங்கள் ஃபேனின் வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
ஃபேன் மோட்டார்களில் பொருத்தப்பட்டிருக்கும் பியரிங்கில் காலப்போக்கில் அழுக்கு மற்றும் தூசி குவிந்து, ஃபேன் மெதுவாக ஓட வழி வகுக்கலாம். எனவே அதை சரி பார்த்து, பியரிங் ஆயில் விடவும். ஒருவேளை பியரிங் பழுதாகி இருந்தால், கடையில் கொடுத்து புதிதாக மாற்றுவது நல்லது.
மின்விசிறியின் ரெகுலேட்டர்தான் மோட்டார் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. அதிக நாட்கள் பயன்படுத்தும்போது குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனை கண்டறிந்து மாற்றுவது முக்கியம். மின்விசிறியின் இறக்கையில் உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது மின்விசிறியின் வேகத்தை குறைக்கிறது.
Readmore: இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தானுக்கு கடுமையான இழப்பு..!! – கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம்