நடிகர் சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் அவர் தமிழ் திரையுலகில் ஒரு முத்திரை பதித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனை தொடர்ந்து, ரஜினி முருகன் திரைப்படத்திலும் இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி அசத்தியது.
இத்தகைய நிலையில் அதே கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் தான் சீமராஜா. ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனை அந்த திரைப்பட குழுவில் இடம் பெற்றுள்ள யாருமே எதிர்பார்க்கவில்லை. அதோடு இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அதோடு சூரி, நெப்போலியன், கீர்த்தி சுரேஷ், சிம்ரன் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருந்தது.
இந்த திரைப்படத்தில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் ஒரு தோல்வி திரைப்படமாக இருந்தாலும் கூட இன்றளவும் சின்னத்திரை டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது. அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்கள் இந்த திரைப்படத்தை விரும்பி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 18 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.