fbpx

சற்றுமுன்…!போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின்..! ஆனால் மேலும் ஒரு சிக்கல்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்குக்கு ஜாமின் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகி மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதுவரை ரூ. 2,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தும் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கில் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தற்பொழுது ஜாபர் சாதிக் சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்குக்கு ஜாமின் வழங்கி டெல்லி போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் திங்கட்கிழமை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இருக்கும் செல்போன் எண் மற்றும் பாஸ்போர்டை விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும். ஜாமின் கிடைத்தாலும் அமலாக்கத்துறை வழக்கிலும் கைதாகி உள்ளதால் ஜாபர் சாதிக் சிறையில் தான் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Jaber Sadiq granted bail in drug case

Vignesh

Next Post

Maharashtra MLC Elections | மகாராஷ்டிராவின் இன்று எம்எல்சி தேர்தல்!! களத்தில் வேட்பாளர்கள்..

Fri Jul 12 , 2024
The voting will take place between 9 am and 4 pm and the counting of votes will begin an hour later. 12 candidates are in fray on 11 seats in the state's Council.

You May Like