ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்..
கேரள மாநில லாட்டரித் துறை ஓணம் பம்பர் முடிவுகளை நேற்று அறிவித்தது. லாட்டரியில், முதல் பரிசு சுமார் 25 கோடி ரூபாய் மற்றும் பல சிறிய பரிசுகள் 1,000 ரூபாய் வரை இருந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. வரி மற்றும் பிற கட்டணங்களைக் கழித்த பிறகு, ரூ.25 கோடி ஜாக்பாட் பெற்ற முதல் பரிசு வென்றவருக்கு ரூ.15.75 கோடி கிடைக்கும். அவரது பெயர் அனூப், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீவரஹம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அனூப் இதுகுறித்து பேசிய போது “ஆரம்பத்தில், என்னால் அதை நம்ப முடியவில்லை, என் மனைவியை இருமுறை சரிபார்க்கச் சொன்னேன். என் கடவுளே, எனது எண் TJ -750605 முதல் பரிசை வென்றுள்ளது.. “எனக்கு பணப் பற்றாக்குறை இருந்தது, என் மகனின் உண்டியலில் இருந்து பணம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தத் தொகையை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் முடிவு செய்யவில்லை..
கொரோனா பெருந்தொற்று எங்களை மோசமாக பாதித்தது.. மேலும் அதிக எரிபொருள் விலையும் எங்களின் துயரை அதிகரித்தது… நான் பல கடன்களை வாங்கி, எனது நிதி நிலைமையை மேம்படுத்த மலேசியா செல்ல திட்டமிட்டிருந்தேன். இப்போது நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. இப்போது நியாயமாகச் செலவு செய்வேன்..” என்று தெரிவித்தார்..