சென்ற பத்தாம் தேதி தமிழ்நாடு முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ஜெய்லர். ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் பல்வேறு விதத்திலான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறாத நிலையில், அடுத்ததாக சினிமா உலகில் காம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் இருந்தார் .இந்த நிலையில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, ஜெய்லர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
அவர் நினைத்தது போலவே, அந்த திரைப்படம் நெல்சனுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்துவிட்டது. இந்த நிலையில் தான், தற்போது ஜெய்லர் திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. இந்த திரைப்படத்தின் வசூல் என்பது வெளியாகி, நான்கு நாட்களில், 300 கொடியை கடந்திருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.
வார விடுமுறை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அனைத்து மொழிகளிலும் சேர்த்து, ஜெயிலர் திரைப்படம் 38 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் வசூல் செய்த மொத்த பணம் 4 நாட்களில் 300 கோடியை கடந்து இருக்கிறது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படத்தின் வசூல் சற்று மந்தமாக இருந்த நிலையில், அன்றைய தினம் 25.75 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை இந்த திரைப்படம் 34.3 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.
இந்த திரைப்படம் கடந்த நான்கு தினங்களில் 300 கோடிக்கு மேலே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் எந்திரன் 2.0, கபாலி போன்ற திரைப்படங்களுக்கு பிறகு 300 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் இணையும் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் மாறி உள்ளது என்ற விபரமும் தற்போது பெரியவந்துள்ளது.