Rajnath Singh: பயங்கரவாத முகாம்களுக்கு PoK நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் நடைபெற்ற 9-வது ஆயுதப்படை தினத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு PoK நிலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார் . ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் ஜம்மு – காஷ்மீர் முழுமையடையாது” என்று கூறிய சிங், ஜம்மு காஷ்மீரை சீர்குலைக்க பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானுக்கு ஒரு வெளிநாட்டுப் பகுதி தவிர வேறொன்றுமில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலம் பயங்கரவாதத்தை நடத்த பயன்படுத்தப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார்.
“பாகிஸ்தான் 1965 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது… நமது இஸ்லாமிய சகோதரர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர்… இன்றும் இந்தியாவுக்குள் நுழையும் பயங்கரவாதிகளில் 80% க்கும் அதிகமானோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். எல்லைப் பயங்கரவாதம் 1965 இல் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால் போரில் கிடைத்த தந்திரோபாய நன்மையை அப்போதைய மத்திய அரசால் மாற்ற முடியவில்லை என்று கூறினார்.