fbpx

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை..! யார் மீது சந்தேகம்..? ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

5 ஆண்டுகளுக்கு பிறகு மறைந்த ஜெயலலிதாவின் மரணம் சார்ந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது இறுதி விசாரணை அறிக்கையை முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி, ”விசாரணை ஆணையத்தை தொடரலாம் என்று அனுமதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், ஓராண்டுக்குள் அனைவரிடமும் எங்கள் தரப்பில் இருந்து விசாரணை செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை..! யார் மீது சந்தேகம்..? ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

500 பக்கம் ஆங்கிலத்திலும் 608 பக்கம் தமிழிலும் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 158 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர். ஜெயலலிதாவை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததில் ஆணையத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால், ஜெயலலிதா இல்லத்திற்கு சென்று விசாரணை செய்வதற்காக வாய்ப்பு ஏற்ப்படவில்லை. மேலும், ஆணையம் கால தாமதமாக விசாரிக்கிறது எனக் கூறினார்கள். 149 சாட்சியங்களை ஒரு வருடத்தில் விசாரித்து உள்ளோம். மொத்தமாக 150 நாட்கள் வருடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு சசிகலாவை அழைத்தோம், அவர் வரவில்லை. விசாரணைக்கு நேரில் ஆஜராக வற்புறுத்த முடியாது. ஆகையால், பிராமணப் பத்திரம் மூலம் தகவல்களை கேட்டு பெற்றோம். நிறைவாக விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை..! யார் மீது சந்தேகம்..? ஆறுமுகசாமி பரபரப்பு பேட்டி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் யார் மீதாவது சந்தேகப்படுகிறதா என கேட்டதற்கு.. அதுதான் ரிப்போர்ட் என பதிலளித்தார். மேலும் அறிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு, விசாரணை அறிக்கை குறித்த விவரங்களை அரசு தான் வெளியிட வேண்டும். என்னால் முடிந்ததை எழுதி உள்ளேன். பெரும்பாலும் சாட்சியங்களின் கருத்துகளை குறிப்பிட்டுள்ளேன். விசாரணைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். கேட்ட கேள்விகளுக்கு போதிய பதில்கள் கிடைத்தன. விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் அளித்த பதிலை வைத்து இறுதி அறிக்கை அளித்துள்ளேன் என்றார்.

Chella

Next Post

பள்ளிக்குச் சென்ற மாணவி பைக்குள் அடைத்து சடலமாக கண்டெடுப்பு... பகீர் சம்பவம்..!

Sat Aug 27 , 2022
மகாராஷ்டிரா, பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம் அருகே மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகே பை ஒன்று கிடந்தது. அந்த வழியே சென்ற ஒருவர் அந்த பையை பார்த்து சந்தேகமடைந்து, இதுகுறித்து வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பையை பிரித்து பார்த்தபோது, அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் இருந்தது. பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் […]

You May Like