விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தின்போது வெளியான திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஷியாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா அவருக்கும் விஜய்க்குமான தாய், மகன் சென்டிமென்ட் காட்சிகள் கண் கலங்க வைக்கும் விதமாக இருந்தது.
இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா எத்தனை லட்சம் சம்பளமாக வாங்கினார் என்பது தொடர்பாக தற்போது தெரியவந்திருக்கிறது. விஜய்க்கு தாயாக நடிப்பதற்கு நடிகை ஜெயசுதா 30 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிய விவரம் தற்போது தெரிய வந்திருக்கிறது.