fbpx

Jeff Bezos | எலான் மஸ்க்கை ஓரங்கட்டி உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர்..!!

உலகின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை எலான் மஸ்க்கிடம் இருந்து, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தட்டிப் பறித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் (எக்ஸ்) நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்க், கடந்த 9 மாதங்களுக்கு மேலாக உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்று வந்தார். ஆனால், அமேசான் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் (60), தற்போது எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு பணக்காரர்களின் தரவரிசையில் ஜெஃப் பெசோஸ் முதலிடம் பிடித்தது இதுவே முதல் முறை ஆகும். நேற்று (மார்ச் 4) டெஸ்லா INC பங்குகள் 7.2% சரிந்ததை அடுத்து, ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் தனது முதல் இடத்தை இழந்தார். எலான் மஸ்க் இப்போது 197.7 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். அதேபோல ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு 200.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Read More : Vijayalakshmi | ”சீமான் மாமா உங்கள மறக்க முடியல”..!! விஜயலட்சுமி வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்..!!

Chella

Next Post

Gold | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

Tue Mar 5 , 2024
தங்கத்திற்கு சிறப்பானது என்பது தவிர, அதை பதுக்கி வைக்கவும் பலரும் வாங்குகின்றனர். இந்தியர்கள் தங்கத்தை மிகவும் விரும்புவதும், அதை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுவதும் தான் தங்கத்தை பதுக்க முக்கிய காரணமாகும். திருமணங்கள் அல்லது முக்கிய விழாக்களின் போது தங்கத்தை வாங்கி, பத்திரப்படுத்தி வைக்கும் வழக்கம் இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. தங்கம் விலை எதுவாக இருந்தாலும், தங்கத்திற்கு இந்தியாவில் தனி இடம் இருப்பதை மறுக்க முடியாது. அதன்படி, […]

You May Like