India – Canada: ஜஸ்டின் ட்ரூடோவின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதால் அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், கனடாவிற்கான இந்திய தூதராக இருக்கும் சஞ்சய் குமார் மற்றும் சில குறிப்பிட்ட இந்திய அதிகாரிகள் மீது அந்நாடு மோசமான புகாரை தெரிவித்து இருந்தது.
கொலை வழக்கு விவகாரத்தை ஆர்வமுடன் தலையிட்டு விசாரித்து வருவதாக குற்றம்சாட்டியது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் புகார் அளித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தூதரக பணியில் சஞ்சய் குமார் நீண்ட கால அனுபவம் பெற்றவர் எனவும், அவர் பல நாடுகளில் தூதராக இருந்துள்ளார் எனவும் கூறியிருந்தது.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலா ளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. பின்னர் இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடாஅரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் என அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Readmore: மாதவிடாய், கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா..? ஆயுர்வேதம் என்ன சொல்கிறது..?