fbpx

ஆபத்தில் தள்ளிய செல்ஃபி மோகம்..! கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள்..!

ஆபத்தை உணராமல் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை அடுத்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆபத்தை உணராமல் 3 இளைஞர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் நீர்வரத்து அதிகரித்ததால், பாறையின் மீது நின்ற 3 இளைஞர்களும் கரைக்கு திரும்ப முடியாமல் திணறினர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் 3 இளைஞர்களையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் மீட்பு குழுவினருக்கு சவால் ஏற்பட்டது. இதனால் பதற்றமும் அதிகரித்தது.

ஆபத்தில் தள்ளிய செல்ஃபி மோகம்..! கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள்..!

பின்னர் கயிற்றில் கல்லை கட்டி இளைஞர்களிடம் வீசினர். அவர்கள் கயிற்றை பிடித்துக் கொள்ள, மீட்புகுழுவினர் கயிற்றைப் பிடித்தபடி சென்றனர். பின்னர் இளைஞர்கள் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் குதித்து அடுத்தடுத்து பத்திரமாக கரை சேர்ந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தாரமங்கலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புக் குழுவினரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். அதேநேரத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Chella

Next Post

#Flash: ஒரே நாளில் 20,528 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு...! உயிரிழப்பு எண்ணிக்கை 49ஆக உயர்வு...

Sun Jul 17 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 20,528 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 49 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 17,790 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]

You May Like