தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலை குறைந்தது. ஆனால் தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், சென்னையில் செப்டம்பர் 27ஆம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ 320 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ 7100க்கு விற்பனையானது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,800க்கு விற்கப்பட்டது. கிட்டதட்ட 57 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. வெள்ளியின் விலையும் உயர்ந்துவிட்டது, ஒரு கிராம் ரூ 102 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அக்டோபர் 1 ஆம் தேதி சவரனுக்கு ரூ 240 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7050 க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு சவரன் தங்கம் ரூ 56,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்ற இறக்கத்திற்கு காரணம் என்ன? 8 நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்த பின்பு தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வந்த நிலையில், அந்நாட்டின் பணவீக்கம் மற்றும் நுகர்வோர் செலவின தரவுகளும், சீனாவின் புதிய பொருளாதார ஊக்கத் திட்டமும், டாலர் மதிப்பில் ஏற்பட்ட சரிவும் தான் தற்போதைய தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
Read more ; சூட்கேஸில் நிர்வாண நிலையில் பெண் சடலம்… சேலத்தையே அதிர வைத்த கொடூர சம்பவம்..!! பின்னணி என்ன?