ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஜியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற பகுதி தான் சாஸ். இது பொகாரோ மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்று கூறப்படுகிறது. இங்கே அசோக்(37) என்ற நபர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு அருகே பெண் ஒருவரும் கடை நடத்தி வருகிறார்.
இருவரும் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அருகருகே கடை நடத்தி வருவதால் நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெண்ணுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அந்த சிறுமி தன்னுடைய தாயுடன் கடைக்கு வந்து செல்கிறார். பக்கத்து கடைக்காரரான அசோக் மற்றும் அங்குள்ள குழந்தைகளுடன் சிறுமி பேசி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிறுமி தன்னுடைய தாயுடன் கடைக்கு வந்துள்ளார். கடைக்கு மேல் தளத்தில் அந்த பகுதியில் இருந்த சிறுவர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமியின் தாய் வழக்கம் போல தன்னுடைய கடை வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். மாலை சமயத்தில் சிறுவர்கள் அங்கிருந்து சென்றுவிட சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இதை பார்த்த அந்த கடைக்காரர் அசோக் சிறுமியிடம் பேச்சு கொடுத்து தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற அசோக் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் அந்த சிறுமி கூக்குரலிட்டு அழ தொடங்கிய சூழ்நிலையில், அசோக் அங்கிருந்து தப்பிச் சென்றார் மகளுடைய அழுகுரல் கேட்டு பதறிப் போய் வந்து பார்த்த தாய் அதிர்ச்சி உறைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தன்னுடைய மகளை தூக்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார். அந்த பெண்மணி இந்த நிலையில் மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் சிறுமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து அந்த குழந்தையின் தாய் வழங்கிய புகாரின் அடிப்படையில், அசோக்கை கைது செய்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தது அதோடு தன்னுடைய மகளுக்கு இது போன்ற அவலத்தை ஏற்படுத்திய அசோக்கை தூக்கிலிட வேண்டும் என்று தாய் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார்