fbpx

ரூ.175, ரூ.445 விலையில் ஜியோ டிவி பிரீமியம் திட்டங்கள் அறிமுகம்!. அசத்தல் சலுகைகள்!. என்னென்ன தெரியுமா?

Jio TV Premium Plans: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், OTT சந்தாதாரர்களை இலக்காகக் கொண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மொபைல் டேட்டா சலுகைகளுடன் பல ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலையும் இணைத்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வப்போது குறைந்த கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு திட்டங்களை வடிவமைத்து, அதை மலிவான விலையில் கொடுக்க முயற்சிக்கும் நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது எனலாம். அந்தவகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மொபைல் டேட்டா சலுகைகளுடன் பல ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலையும் இணைத்துள்ளது. ₹175 மற்றும் ₹445 விலையில் ஜியோ டிவி பிரீமியம் திட்டங்கள் கிடைக்கும். இது பயனர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

OTT சந்தாதாரர்களை இலக்காகக் கொண்டு, இரண்டு சூப்பர் திட்டங்களை ரிலையன்ஸ் நிறுவனம் (Reliance jio) கொண்டு வந்துள்ளது. ஒன்று, ஸ்ட்ரீமிங் மற்றும் டேட்டாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, மற்றொன்று குரல் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற 5G அணுகலை உள்ளடக்கியது. டிஜிட்டல் பொழுதுபோக்கு தேவை அதிகரிக்கின்ற நிலையில், இந்த திட்டங்கள் தனிப்பட்ட OTT சந்தா திட்டங்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன. இதில் 10 ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு உள்ளடக்கத்துடன் அணுகலை வழங்குகிறது, அதில் Sony LIV, Zee5, Discovery+ மற்றும் பல உள்ளன.

ரூ.175 ப்ரீபெய்ட் திட்டம் முதன்மையாக ஸ்ட்ரீமிங் நன்மைகள் மற்றும் டேட்டா அணுகலைத் தேடும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் 10GB lump-sum data, மற்றும் அதன் பிறகு 64 Kbps வேகத்தில் post-data வழங்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு 10 OTT தளங்களுக்கான அணுகல். குரல் அழைப்புகள், SMS அல்லது வரம்பற்ற 5G தரவு எதுவும் கிடைக்காது. Sony LIV, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, மற்றும் Hoichoi.இந்தத் திட்டத்தில் குரல் அழைப்பு இல்லை என்பதால், வழக்கமான தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயனர்கள் செயலில் உள்ள ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

₹445 Jio TV PREMIUM திட்டம்: பொழுதுபோக்கு மற்றும் இணைப்பு இரண்டையும் விரும்பும் பயனர்களுக்கு, ₹445 திட்டத்தில் தினசரி data, OTT மற்றும் குரல் அழைப்புகள் சேவைகளை வழங்குகிறது. 64 Kbps வேகத்தில் தினசரி 2GB data வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் 5G டேட்டா (ஜியோவின் வரவேற்பு சலுகையின் கீழ் தகுதியுள்ள பயனர்களுக்கு), அன்லிமிடெட் உள்ளூர், STD மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள், தினசரி 100 SMS, ₹175 திட்டத்தில் உள்ளது போலவே, 10 OTT தளங்களுக்கான சந்தா (Sony LIV, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi), FanCode விளையாட்டு உள்ளடக்கம் மற்றும் Jio Cloud சேமிப்பு போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது.

எந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்? OTT-க்கு முன்னுரிமை வழங்கும் பயனர்களுக்கு: நீங்கள் முதன்மையாக ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் அவ்வப்போது மொபைல் டேட்டாவை விரும்பினால் பொருந்தும். ஆனால் அழைப்புகளுக்கு ஏற்கனவே செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்திருந்தால் ₹175 திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

ஒட்டுமொத்த பாக்கேஜ் விரும்பும் பயனர்களுக்கு: தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் ஜியோவின் OTT தொகுப்பை முழுமையாக அணுக வேண்டிய பயனர்களுக்கு ₹445 திட்டம் சிறந்தது.

Readmore: திப்பிலியின் அற்புத மருத்துவ பயன்கள்..!! கல்லீரை அசால்ட்டா சுத்தம் செய்யும்..!! நீங்களும் இப்படி டிரை பண்ணி பாருங்க..!!

English Summary

Jio TV Premium Plans Launched at Rs.175 and Rs.445! Amazing Offers! Do you know what they are?

Kokila

Next Post

குட் நியூஸ்..! பி.இ., பட்டத்துடன் பி.எட்., முடித்தவர்கள் ஆசிரியராக பணி செய்யலாம்...! தமிழக அரசு அறிவிப்பு

Thu Feb 27 , 2025
Those who have completed B.Ed. with a B.E. degree can work as teachers.

You May Like