fbpx

5,000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது…! மத்திய அரசு தகவல்

தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது.

டெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1953ல் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, ஏறத்தாழ அனைத்துத் தொழில் துறைகளிலும் தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 5000க்கும் அதிகமான உரிம ஒப்பந்தங்களை என்ஆர்டிசி முடித்துள்ளது என்றார். இந்தியாவில் 2000க்கும் அதிகமான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கும் இது உதவியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மத்திய அரசால் நீடிக்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு தொழில்நுட்ப ரீதியாக புத்தொழில்களை மதிப்பீடு செய்ய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி)யின் அமைச்சகங்களுக்கு இடையேயான வாரியங்களுக்கு என்ஆர்டிசி உதவுகிறது என்றும் இதுவரை புத்தொழில்களின் 7500 விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

Vignesh

Next Post

அதிவேகமாக பரவும் கொரோனா..!! மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு..!!

Fri Dec 30 , 2022
கொரோனா மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளின் போதுமான இருப்பை உறுதி செய்ய மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எஃப். 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முகக்கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு […]
அதிகரிக்கும் கொரோனா..! தடுப்பூசி குறித்து மத்திய அரசு சொன்ன பரபரப்பு தகவல்..!

You May Like