̓தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குனரகத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஹாஸ்பிடல் குவாலிட்டி மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08.03.2023 தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முதுகலையில் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு சம்பளமாக மாதம் 60000 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார் என அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வேலைவாய்ப்பில் சேர்வதற்கு மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய தேவை இல்லை.
இந்த வேலைவாய்ப்பில் சேர விருப்பம் உள்ள நபர்கள் தலைவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர்-641604 என்ற முகவரிக்கு மார்ச் எட்டாம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதிச் செய்திக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய tiruppur.nic.in என்ற முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.